சனி, 31 அக்டோபர், 2009

கடற்கரை





கடல்
காதலிக்காக
மடல் எழுதிக் காத்திருக்கும்
மணல் காதலன் .

பாதச் சுவடுகள் பலபதிந்தும்
காலச் சுவடாய் இவனுள்
கரிக்கும் நீர்மங்கை .


ஊடல் கொள்ள நினைத்தவனுக்கு
சிலநேரம் உதடுமட்டும்
நனைவதுண்டு .


அலைப் புன்னகையை
வலைவீசிப் பிடிக்கக் காத்திருக்கும்
வசீகர (மீ)மானவன்.



தென்றல் தாவணி
தழுவும்போது மட்டும்
தேகம் சிலிர்க்கும் இவனுக்கு .



காதலித்தவள் கட்டி அணைத்தால்
காலமாகிப் போவார்களென்று
கண்கொண்டுக் காத்திருக்கும்
காதல் தியாகி .


மானுடக் காதலையும்
வான்கூடும் காதலையும்
தேன்கூடாய் சேகரிக்கும்
தேமதுரக் கவிஞன்.

3 கருத்துகள்:

  1. நண்பர் மதுரா வேள்பாரி -க்கு நான் கண்ணன் (வேல் கண்ணன்)
    தோழர் சி.கருணாகரசு உங்களையும் அறிமுகம் செய்தார் அன்றே
    சத்ரியனை தொடர ஆரம்பித்தேன். ஆனால் உங்களின் வலைப்பூவை என்னால்
    தொடர முடியவில்லை. கணினி- hang -ஆகி நின்றது. இதோ, வந்து விட்டேன்
    இரண்டு பக்கங்களின் பதிவுகளை படித்து விட்டேன். அருமை என்ற ஒற்றை சொல்
    போதாது. முழுவதும் படித்தும் விடுவேன்.
    //..தேன்கூடாய் சேகரிக்கும்
    தேமதுரக் கவிஞன். // நீங்களும் தான் வேள்பாரி.
    தேனாக இனித்த கவி
    உள்ளங்களில் கூடு கட்டுகிறது.
    இனி தொடர்வேன்... வாழ்க.

    பதிலளிநீக்கு