திங்கள், 30 நவம்பர், 2009
உயிர்வலி.
அன்னை பெற்றெடுத்த அன்பின்வலி
ஆண்மையை வென்ற பெண்மையின்வலி
இன்பத்தில் நின்ற உண்மையின்வலி
ஈன்ற பொழுதில் உவகையின்வலி
உயிர்பெற்று வந்த ஊணுடலின்வலி
ஊர்போற்ற வேண்டிய மானுடலின்வலி
எவ்வலியும் அறியாத பூ மடலின்வலி
ஏந்திழையால் நீர்சொரிய உயிர்தலின்வலி
ஐம்பெரும் பூதங்களை அறிதலின்வலி
ஒப்பனைகள் இல்லாத முகிழ்தலின்
ஓர்நாளும் சொல்லாத பகிர்தலின்வலி
ஔவியம் பேசாத நெகிழ்தலின் வலி .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையா சொல்லியிருக்கீங்கப்பா..
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு/அம்மாவிற்குத் தலைவலி
வண்ணத் தொலைக்காட்சி மாற்றுவழி
அப்பாவிற்கு நெஞ்சு வலி
புலி நகத்தில் புதுச் சங்கலி/
தங்களின் இந்தக் கவிதையை வரிகளைக் கண்முன்னே வரவழைத்து வீட்டீர்கள்
வாழ்த்துகள்
சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கள்
பதிலளிநீக்குஆங்கிலத்திலும் தமிழிலும் தட்டச்சு செய்ய சிரமமாக உள்ளது
அன்புடன்
திகழ்
தங்களின் கருத்துகளுக்கு நன்றி அன்பர்களே .
பதிலளிநீக்குவசந்த் அவர்களே தங்களின் பயம் அகல பயம் என்னும் பொய்மைப் பாம்புயிர் பிளப்பீர்.