ஞாயிறு, 29 நவம்பர், 2009

பரிமாற்றம்.

வள்ளுவன் சொல்லாத
வாழ்வியல் நெறியா
ஔவை சொல்லாத
அமுதமான மொழியா

கம்பன் இயற்றாத
காவிய ரசமா
பாரதி பாடாத
பார்யுகப் புரட்சியா

படைத்தவைகள் இங்கே
பரிமற்றம் பாத்திரத்திற்கு
ஏற்ற உருமாற்றம்

நடையை மாற்று
என்றொரு நண்பர்
அடியை மாற்று
என்றொரு அன்பர்

பரிமாற வந்த
பதார்த்தங்களே
படைத்தவைகள் எல்லாம்
எதார்த்தங்களே

அன்னப் பறவையின்
நடையொரு அழகு
சின்னப் பறவையின்
சிறுநடை அழகு


வண்ணக் கிளியின்
வாய்மொழி அழகு
சின்னக் குழந்தையின்
தேன்மொழி அழகு

எண்ணக் குவியலின்
எல்லாமே அழகு
முதலில் நீ பரிமாறப் பழகு.

2 கருத்துகள்:

  1. மொத்தத்தில் அத்தனை வரிகளும்
    அழகு அழகு அழகு...

    இதில் [word வெரிபிகேஷன்]சொல்சரிபார்ப்பை நீக்கிவிடவும் அப்போதுதான் நிறைய பின்னுட்டங்கள் வரும் என்பது என்கருத்து..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி .

    பதிலளிநீக்கு